Your Ad Here

MAP

Wednesday, May 26, 2010

தமிழ்நாடு

in தமிழ்நாடு
அமைவிடம் 13°05′N 80°16′E / 13.09, 80.27
தலைநகரம் சென்னை
மிகப்பெரிய நகரம் சென்னை
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாவட்டங்கள் 32
Established 1956-11-01
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா
முதலமைச்சர் மு. கருணாநிதி
சட்டசபை (இடங்கள்) Unicameral (235)
மக்கள்தொகை
அடர்த்தி
66,396,000 (7வது)
511 /km2 (1,323 /sq mi)
ஆட்சி மொழி தமிழ்
நேர வலயம் IST (ஒ.சே.நே+5:30)
பரப்பளவு 130058 km2 (50216 sq mi)
ISO 3166-2 IN-TN

1 comment:

  1. புவியமைப்பு

    தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

    நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

    இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகுமலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.

    மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

    ReplyDelete