Your Ad Here

MAP

Saturday, May 22, 2010

THIRUVALLUVAR

3 comments:

  1. திருவள்ளுவர் (thiruvaLLuvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.

    திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.


    திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2007 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2038 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும்.

    ReplyDelete
  3. வரலாறு

    தமிழில் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்க சக வருடம் பயன்படுத்தப்பட்டாலும் அது தமிழரல்லாத சகர்களின் ஆட்சியை ஆதாரமாகக் கொண்டதால், தமிழர்களுக்கு என தனியாக தொடர்ச்சியாக கூடும்படி ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன் ஆண்டு) பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறிஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவுகட்டினர். திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப்பெரியோர்களில் மறைமலை அடிகள். தமிழ்த்தென்றல் என்றழைக்கப்பெற்ற திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

    தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் (Gazette) வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.

    ReplyDelete